இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் சில நாட்களுக்கு முன் ரிலீசான அசுரன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது அசுரன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் அடுத்த படத்தின் பூஜையை இன்று ஆரம்பித்துள்ளார்.
இப்போது நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். அசுரன் தந்த வெற்றியை பார்த்து வெற்றிமாறன் பிரபல நடிகரை வைத்து இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு நகைச்சுவை நடிகரை கதாநாயகனாக மாற்றி உள்ளார்.
தமிழ் சினிமாவுக்கு பிரபல கதாநாயகன் தேவையில்லை சிறந்த கதை இருந்தாலே ஒரு சிறந்த படம் தர முடியும்.