Home » கேளிக்கை » விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் நடிக்கிறாராம்.

👤 Sivasankaran19 Oct 2019 3:18 PM GMT
விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
Share Post

விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் தயாராகின்றன. தற்போது அந்த வரிசையில் கீர்த்தி சுரேசும் புதிய படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். கதாநாயகனாக ஆதி நடிக்கிறார். நாகேஷ் கூகுனூர் இயக்குகிறார்,

இந்த படத்தின் கதாபாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷ் கடும் உடற்பயிற்சிகள் செய்து ஒல்லியாக மாறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் நடிக்கிறாராம்.