இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
தற்போது 'ராக்கி' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் கதாநாயகனாக வசந்த் ரவி வருகிறார். இவர் ஏற்கனவே தரமணி படத்தில் நடித்துள்ளார். ராக்கி படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாரதிராஜா பயங்கரமான வில்லனாக நடிக்கிறார். இது தாதாக்களுக்குள் நடக்கும் பழிவாங்கும் கதை.