Home » கேளிக்கை » மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக புகார்

பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

👤 Sivasankaran25 Oct 2019 3:19 PM GMT
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக புகார்
Share Post

பிரகாஷ்ராஜ் மீது டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பிரகாஷ்ராஜ் பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா குறித்து பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், ராம்லீலா குறித்து பேசும்போது, அதனை குழந்தை ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியதாகவும் ராம்லீலா சிறுபான்மையினரிடையே அச்சத்தை பரப்புகிறது என்று கூறியதாகவும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.