Home » கேளிக்கை » வசூலில் சாதனை படைத்த பிகில்

வசூலில் சாதனை படைத்த பிகில்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

👤 Sivasankaran28 Oct 2019 4:30 PM GMT
வசூலில் சாதனை படைத்த பிகில்
Share Post

அட்லீயின் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியிடப்பட்டு இருக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் இந்த படத்தில் அப்பா - மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் நடித்திருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததில் இது விஜய்யின் 7வது படமாகும்.