Home » கேளிக்கை » தனுசு ராசி நேயர்களே படம் பற்றிய சில தகவல்கள்

தனுசு ராசி நேயர்களே படம் பற்றிய சில தகவல்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

👤 Sivasankaran31 Oct 2019 6:17 PM GMT
தனுசு ராசி நேயர்களே படம் பற்றிய சில தகவல்கள்
Share Post

'தனுசு ராசி நேயர்களே' படத்தை சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படம் நவம்பர் மாதம் ரிலீசாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.