இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட பொன்விழாவில் எனக்கு கவுரவம் மிக்க சிறப்பு விருதை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.