'மண்டி' என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
'மண்டி' விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்களும் நாடார் அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.
அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.