Home » கேளிக்கை » வைரலாகும் சூரரைப் போற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வைரலாகும் சூரரைப் போற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

👤 Sivasankaran10 Nov 2019 4:23 PM GMT
வைரலாகும் சூரரைப் போற்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Share Post

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் "சூரரைப் போற்று". இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா, அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா இன்று வெளியிட்டார். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.