Home » கேளிக்கை » புதிய சாதனை படைத்த விஸ்வாசம்

புதிய சாதனை படைத்த விஸ்வாசம்

இதை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

👤 Sivasankaran13 Nov 2019 2:25 PM GMT
புதிய சாதனை படைத்த விஸ்வாசம்
Share Post

சிவா இயக்கத்தில் அஜித் குமார், நயன்தாரா நடிப்பில் பொங்கல் அன்று வெளியான படம் "விஸ்வாசம்". இப்படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார்.

அஜித், நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள், டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப்பில் சாதனை படைத்தது.

தற்போது டுவிட்டரில் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ம் ஆண்டு ட்விட்டரில் அதிக செல்வாக்குடன் இருந்த பெயர்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தை விஸ்வாசம் பிடித்திருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.