எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து 'வலிமை' படத்தில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி 'வலிமை' படம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.
அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் அஜித்தின் 'கார் சேசிங்' காட்சிகளும் இடம் பெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'கார் சேசிங்' காட்சிகளை பிரமாண்டமாக அமைத்துக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்களில் ஒருவரான ஹென் கொலின்ஸ் என்பவரை தமிழகத்துக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.