சரித்திர கதை அம்சம்முள்ள கதைகளில் நடிக்க அனுஷ்காவிற்கு வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன. சரித்திர படத்தை ஒதுக்கி வைப்பது என்று தற்போது முடிவெடுத்துள்ளார்.
வணிக ரீதியிலான படங்களில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார் அனுஷ்கா. அந்த வகையில் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார்.
சிரஞ்சீவி நடிக்கும் கமர்ஷியல் படமொன்றில் நடிக்க அப்பட இயக்குனர் கெராட்டாலா சிவா அணுகியபோது ஏற்க மறுத்துவிட்டார் அனுஷ்கா.