Home » கேளிக்கை » மீண்டும் நகைச்சுவை நடிப்பிற்கு திரும்பிய சிவகார்த்திகேயன்

மீண்டும் நகைச்சுவை நடிப்பிற்கு திரும்பிய சிவகார்த்திகேயன்

இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் படம் நஷ்டத்தையே சந்தித்தது.

👤 Sivasankaran9 Dec 2019 5:30 PM GMT
மீண்டும் நகைச்சுவை நடிப்பிற்கு திரும்பிய சிவகார்த்திகேயன்
Share Post

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் மனத்திலும் தனது நடிப்பால் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். நடிக்க வந்த புதிதில் நகைச்சுவையான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. வசூலையும் அள்ளியது.

வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என்று அதிரடி படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட்டார். இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் படம் நஷ்டத்தையே சந்தித்தது.

ரசிகர்கள் நகைச்சுவை படங்களில் நடிப்பதையே விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த படங்களிலே நடிக்க தயாராகி உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள நகைச்சுவை படம் என்று கூறப்படுகிறது.