Home » கேளிக்கை » பொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகுகிறார்

பொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகுகிறார்

குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

👤 Sivasankaran11 Dec 2019 5:16 PM GMT
பொன்னியின் செல்வனில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகுகிறார்
Share Post

கல்கி எழுதிய 'பொன்னியில் செல்வன்' கதையை திரைப்படமாக எடுக்கிறார் இயக்குநர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் எடுக்கப்படுகிறது.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர். ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் எடுக்க உள்ளார்கள்.

குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.