Home » கேளிக்கை » நிகிலா விமலின் ஆசை என்ன தெரியுமா?

நிகிலா விமலின் ஆசை என்ன தெரியுமா?

என்னுடைய தோழி அபர்ணா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கிறார்.

👤 Sivasankaran12 Dec 2019 5:00 PM GMT
நிகிலா விமலின் ஆசை என்ன தெரியுமா?
Share Post

'தம்பி' படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது:

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் 'தம்பி' படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

என்னுடைய தோழி அபர்ணா 'சூரரைப் போற்று' படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும்.

எனக்கும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது என்றார் நிகிலா விமல்.