Home » கேளிக்கை » காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

எனவே தான் வேறெந்த படங்களிலும் நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

👤 Sivasankaran13 Dec 2019 5:00 PM GMT
காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்
Share Post

காஜல் அகவர்வால் 2004ல் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தணிக்கை குழு கெடுபிடியால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயது ஆகிறது. காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் பரவி வருகிறது.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் வேறெந்த படங்களிலும் நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.