Home » கேளிக்கை » வலிமை படத்தின் சண்டைகாட்சியில் டூப் இல்லாமல் நடிக்கும் அஜித்

வலிமை படத்தின் சண்டைகாட்சியில் டூப் இல்லாமல் நடிக்கும் அஜித்

டூப் நடிகர் இல்லாமல் ஆபத்தான சண்டை காட்சிகளில் தானே நடித்து வருகிறார்.

👤 Sivasankaran19 Dec 2019 4:30 PM GMT
வலிமை படத்தின் சண்டைகாட்சியில் டூப் இல்லாமல் நடிக்கும் அஜித்
Share Post

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது.

தற்போது அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்துக்கும் வில்லன்களுக்கும் நடக்கும் மோதல் காட்சிகளை வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து படமாக்குகின்றனர். சண்டை காட்சிகள் ஆபத்தானதாக இருந்ததால் அஜித்துக்கு பதிலாக டூப் நடிகரை பயன்படுத்த சண்டை இயக்குநர்கள் முடிவு செய்தனர்.

அஜித் ஏற்கவில்லை. டூப் நடிகர் இல்லாமல் ஆபத்தான சண்டை காட்சிகளில் தானே நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை போனிகபூர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.