Home » கேளிக்கை » சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு படத்துக்கு முதல் பரிசு

சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு படத்துக்கு முதல் பரிசு

படத்தின் இயக்குநருக்கு 2 லட்ச ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

👤 Sivasankaran20 Dec 2019 4:15 PM GMT
சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு படத்துக்கு முதல் பரிசு
Share Post

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ம் திகதி தொடங்கியது. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.

நேற்று மாலை நடைபெற்ற இறுதி விழாவில், தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த 'ஒத்த செருப்பு' படம், சிறந்த படத்துக்கான முதல் பரிசை வென்றது. படத்தின் இயக்குநருக்கு 2 லட்ச ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.