Home » கேளிக்கை » ரிச்சா கங்கோபாத்யாவிற்கு திருமணம் ஆகி விட்டதா?

ரிச்சா கங்கோபாத்யாவிற்கு திருமணம் ஆகி விட்டதா?

தற்போது ரிச்சா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

👤 Sivasankaran21 Dec 2019 3:53 PM GMT
ரிச்சா கங்கோபாத்யாவிற்கு திருமணம் ஆகி விட்டதா?
Share Post

'ஒஸ்தி', தனுஷுடன் 'மயக்கம் என்ன' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சா கங்கோபாத்யா. அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ரிச்சா தனது காதலர் ஜோ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதுகுறித்து தற்போது ரிச்சா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.

அதில், ''வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்தது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் கிரேட் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ். எங்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இது ரகசிய திருமணம் இல்லை. நான் திரையுலகினை விட்டு வந்து 6 வருடங்கள் ஆகி விட்டது. என் மேல் அன்பு வைத்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.