Home » கேளிக்கை » இந்து கடவுளை அவமதித்ததாக சர்ச்சையில் மாட்டிய சல்மான்கான்

இந்து கடவுளை அவமதித்ததாக சர்ச்சையில் மாட்டிய சல்மான்கான்

இந்த புகார் தொடர்பாக சல்மான்கானோ, படக்குழுவினரோ கருத்து தெரிவிக்கவில்லை.

👤 Sivasankaran23 Dec 2019 3:15 PM GMT
இந்து கடவுளை அவமதித்ததாக சர்ச்சையில் மாட்டிய சல்மான்கான்
Share Post

தபாங்-3 படம் முதல் நாளில் ரூ.30 கோடிக்கும் மேலாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ரூ.22 கோடி மட்டுமே வசூல் குவித்ததாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடி வருவதால், தபாங்-3 படத்தின் முதல் நாள் வசூல் பாதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் ஏதும் பேசவில்லை என அவருக்கு எதிராக ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.

தற்போது, சல்மான்கான் படப்பிடிப்பில் இந்து கடவுளான சிவலிங்கத்தை அவமதித்ததாக புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. இதற்கு எதிராகவும் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். ஆனால் சல்மான்கான் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக சல்மான்கானோ, படக்குழுவினரோ கருத்து தெரிவிக்கவில்லை.