Home » கேளிக்கை » விக்ரம் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

விக்ரம் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது.

👤 Sivasankaran24 Dec 2019 1:15 PM GMT
விக்ரம் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
Share Post

இயக்குநர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக 'விக்ரம்-58' படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது.

இப்படத்திற்கு 'கோப்ரா' என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.