Home » கேளிக்கை » சண்டை பயிற்சி எடுக்கிறார் அனுஷ்கா

சண்டை பயிற்சி எடுக்கிறார் அனுஷ்கா

இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

👤 Sivasankaran27 Dec 2019 4:10 PM GMT
சண்டை பயிற்சி எடுக்கிறார் அனுஷ்கா
Share Post

முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு பாகுபலி படம் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர்.

பாகமதி படமும் வெற்றி பெற்றது. அதன்பிறகு உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனுடன் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அனுஷ்கா அதிரடி வேடத்தில் நடிப்பதாகவும் இதற்காக சண்டை பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.