Home » கேளிக்கை » தர்பார் படத்துக்கு தடைக்கோரி வழக்கு

தர்பார் படத்துக்கு தடைக்கோரி வழக்கு

படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

👤 Sivasankaran30 Dec 2019 3:00 PM GMT
தர்பார் படத்துக்கு தடைக்கோரி வழக்கு
Share Post

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படம் ஜனவரி 9-ம் திகதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில், தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.