Home » கேளிக்கை » எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ராதிகா

எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ராதிகா

ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

👤 Sivasankaran4 Jan 2020 4:39 PM GMT
எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் ராதிகா
Share Post

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து ராதிகா சரத்குமார். தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், 'கலையரசி' என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராதிகா சின்னத்திரையில் 23 வருடங்களாக நடித்து வருகிறார். இவருடைய அடுத்த தொடர், 'சித்தி-2. இப்போது அவர், 'கோடீஸ்வரி' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனது தந்தை 'நடிகவேள்' எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது ராதிகா சரத்குமாரின் கனவு.

படம் தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி விட்டார் ராதிகா சரத்குமார்.