Home » கேளிக்கை » விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்

விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்

ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தி விட்டார்கள்.

👤 Sivasankaran7 Jan 2020 5:00 PM GMT
விஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயல்
Share Post

தனது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவருடைய பிறந்தநாள் ஜனவரி 16. விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்புதான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர்.

வருடாந்திர உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தளவே இருக்கும் நிலையில், ஒரே நாளில் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி நிர்வாகிகள் 202 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்து அசத்தி விட்டார்கள்.