Home » கேளிக்கை » தடைகளை உடைத்த வெளிவரும் தர்பார்

தடைகளை உடைத்த வெளிவரும் தர்பார்

மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

👤 Sivasankaran8 Jan 2020 3:00 PM GMT
தடைகளை உடைத்த வெளிவரும் தர்பார்
Share Post

ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியே‌‌ஷன்ஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

'ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம் என்று கூறியிருந்தார்.

லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை செலுத்தியுள்ளது. இதனால், மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்ட தடை நீங்கியது.