தர்பார் திரைப்படம் 7 ஆயிரம் திரையரங்குகளில் படம் இன்று வெளியானது. நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பாக திரளான ரசிகர்கள் காத்திருந்தனர்.
படம் திரையிடப்பட்டதும் பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தனர்.
தர்பார் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து வந்திருப்பதாக கூறிய ரஜினி ரசிகர் ஒருவர், ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை பேசி அசத்தினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் தியேட்டர்கள் முன் விடிய விடியக் காத்திருந்தனர். படம் வெளியானதும் டிரம்செட் வாசித்தும், பொங்கலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.