Home » கேளிக்கை » இளையராஜாவிற்கு கேரள அரசின் விருது

இளையராஜாவிற்கு கேரள அரசின் விருது

‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

👤 Sivasankaran16 Jan 2020 3:55 PM GMT
இளையராஜாவிற்கு கேரள அரசின் விருது
Share Post

கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை வழங்கி கௌரவிக்கும். இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

2020-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இன்று சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு 'வணக்கத்துக்குரிய இசைஞானி' என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.