Home » கேளிக்கை » சிறிலங்கா வர ரஜினிகாந்திற்கு விசா மறுப்பு

சிறிலங்கா வர ரஜினிகாந்திற்கு விசா மறுப்பு

அரசியல் நடவடிக்கைக்காகவே ரஜினிகாந்த் இலங்கை அழைத்து வரப்படுகிறார்

👤 Sivasankaran17 Jan 2020 4:00 PM GMT
சிறிலங்கா வர ரஜினிகாந்திற்கு விசா மறுப்பு
Share Post

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படமாட்டாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்ற வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கைக்கு வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், அரசியல் நடவடிக்கைக்காகவே ரஜினிகாந் இலங்கை அழைத்து வரப்படுகிறார் என்றும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.