Home » கேளிக்கை » பத்மஸ்ரீ விருது பெறுகிறார் கங்கனா ரணாவத்

பத்மஸ்ரீ விருது பெறுகிறார் கங்கனா ரணாவத்

திரைத்துறையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு விருது கிடைத்துள்ளது.

👤 Sivasankaran26 Jan 2020 10:56 AM GMT
பத்மஸ்ரீ விருது பெறுகிறார் கங்கனா ரணாவத்
Share Post

கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கௌரவிப்படுத்தப்படுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 16 பேருக்கு பத்ம பூ‌ஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 12 பேருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள் கிடைத்து இருக்கின்றன.

திரைத்துறையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு விருது கிடைத்துள்ளது. இந்தி நடிகை கங்கனா ரணாவத், இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மற்றும் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், பாடகர்கள் சுரேஷ் வாட்கர், அத்னன் சமி, டி.வி. நடிகர் சரிதா ஜோஷி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவிப்பார்.