Home » கேளிக்கை » அசுரன் ரீமேக்கில் அமலாபால் நடிக்கிறார்

அசுரன் ரீமேக்கில் அமலாபால் நடிக்கிறார்

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் நடந்து வருகிறது.

👤 Sivasankaran2 Feb 2020 3:23 PM GMT
அசுரன் ரீமேக்கில் அமலாபால் நடிக்கிறார்
Share Post

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன்.

தீண்டாமையை குறித்து விளக்கிய இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.

அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருநெல்வேலியில் நடந்து வருகிறது.

தற்போது அமலாபாலும் இந்த படத்தில் இணைந்துள்ளார். தனுஷை காதலிப்பவராக நடித்த அம்மு அபிராமி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.