Home » கேளிக்கை » ராதாரவியை எதிர்க்கும் பாடகி சின்மயி

ராதாரவியை எதிர்க்கும் பாடகி சின்மயி

காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர்.

👤 Sivasankaran3 Feb 2020 2:24 PM GMT
ராதாரவியை எதிர்க்கும் பாடகி சின்மயி
Share Post

டப்பிங் சங்க தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட இருக்கிறார். அவரை எதிர்த்து ராமராஜ்ஜியம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் சங்க அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.

'மீ டூ' விவகாரத்தின் போது டப்பிங் சங்கத்தில் சந்தாத் தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். பின்னர் சின்மயி மனு தாக்கல் செய்தார்.

ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பது சந்தேகம்தான்.