Home » கேளிக்கை » நயன்தாராவிற்கு வழக்கறிஞர் கதாபாத்திரமா ?

நயன்தாராவிற்கு வழக்கறிஞர் கதாபாத்திரமா ?

படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

👤 Sivasankaran4 Feb 2020 2:56 PM GMT
நயன்தாராவிற்கு வழக்கறிஞர் கதாபாத்திரமா ?
Share Post

ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாயக் கதைப் படமாக தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது.

படத்தில் அவர் வழக்கறிஞராக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுவரை நயன்தாரா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தவில்லை. படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்கப்படும் என்று கூறி வருகிறார்கள்.