Home » கேளிக்கை » ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை நிறைவேறுமா?

ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை நிறைவேறுமா?

விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்துள்ளார்.

👤 Sivasankaran8 Feb 2020 4:42 PM GMT
ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை நிறைவேறுமா?
Share Post

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாக மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக 'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலும், தற்போது விக்ரம் பிரபுவிற்கு தங்கையாக 'வானம் கொட்டட்டும்' படத்திலும் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், "மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன், ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். எனக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை" என்றும் தெரிவித்துள்ளார். ஆசை நிறைவேறுமா?