Home » கேளிக்கை » தனுஷின் அடுத்த படம் பற்றிய தகவல்

தனுஷின் அடுத்த படம் பற்றிய தகவல்

தற்போது தனுஷ் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் ஹிந்தியில் Atrangi Re என்ற...

👤 Sivasankaran16 Feb 2020 1:59 PM GMT
தனுஷின் அடுத்த படம் பற்றிய தகவல்
Share Post

தற்போது தனுஷ் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்ததும் ஹிந்தியில் Atrangi Re என்ற படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து தனுஷ் நடிக்க உள்ளார். அடுத்த மாதம் துவங்கும் இந்த படத்தின் ஷூட்டிங் மதுரை மற்றும் பீகாரில் நடைபெற உள்ளது.

தனுஷ் அடுத்து கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். மாரி செல்வராஜ் படம் இயக்கும் விதத்தை பார்த்து வியந்து தான் தனுஷ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கின்றனர்.

மற்ற இயக்குநர்கள் போல அதிக காட்சிகள் எடுத்து எடிட்டிங்கில் நீக்காமல், தேவையான காட்சிகளை மட்டும் தான் அவர் எடுக்கிறாராம். இதனால் தயாரிப்பு செலவு அதிகம் குறைந்துள்ளதாம். அதை பார்த்து வியந்து தான் தனுஷ் மீண்டும் அவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.