Home » கேளிக்கை » விபத்தில் காயமடைந்த அஜித் - சோகத்தில் ரசிகர்கள்

விபத்தில் காயமடைந்த அஜித் - சோகத்தில் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி...

👤 Sivasankaran19 Feb 2020 3:31 PM GMT
விபத்தில் காயமடைந்த அஜித் - சோகத்தில் ரசிகர்கள்
Share Post

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பின்னர் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் பொழுது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் உடனடியாக படப்பிடிப்பில் நடிக்க துவங்கினாராம் அஜித் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தற்போது அஜித் அவர்களின் ரசிகர்கள் டுவிட்டரில் #GetwellsoonThala என்ற ஹாஷ்டகை பயன்படுத்தி டிரென்ட் செய்து வருகிறார்கள்.