Home » கேளிக்கை » இந்தியன் 2 விபத்திற்கு காரணமானவர் தலைமறைவு

இந்தியன் 2 விபத்திற்கு காரணமானவர் தலைமறைவு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தின்...

👤 Sivasankaran20 Feb 2020 2:02 PM GMT
இந்தியன் 2 விபத்திற்கு காரணமானவர் தலைமறைவு
Share Post

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. நேற்று இரவு இப்படத்தின் படப்பிடிப்பில் பயன் படுத்தப்பட்ட கிரேன் கீழே விழுந்து கொடூரமான மரண சம்பவம் நடந்தது.

இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த கிரேன் வாகனத்தை இயக்கிய ராஜன் என்பவரின் மீது தவறான முறையில் வாகனத்தை கையாண்டதற்காக, அஜாக்கிரதையாக இருந்ததற்காக போன்ற 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதால், அவரை காலல்துறை தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி அளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.