Home » கேளிக்கை » வரி அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி ஜிவி.பிரகாஷ் வழக்கு

வரி அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி ஜிவி.பிரகாஷ் வழக்கு

காப்புரிமையை நிரந்தரமாகப் படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காகச் சேவை வரி செலுத்த வேண்டும்

👤 Sivasankaran1 March 2020 1:09 PM GMT
வரி  அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி ஜிவி.பிரகாஷ் வழக்கு
Share Post

பாடல்களுக்கான நிரந்தரக் காப்புரிமை வழங்கியதற்காக, வரி செலுத்தும்படி ஜிஎஸ்டி இணை இயக்குநர் அனுப்பிய அறிவிப்புக்குத் தடை விதிக்கக் கோரி ஜி.வி.பிரகாஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாகப் படத் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காகச் சேவை வரி செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குநர் அறிவிப்பு அனுப்பினார்.

இதை எதிர்த்து அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அதை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு ஜிஎஸ்டி துறைக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஒத்தி வைத்தார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இதே போல மனுதாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.