Home » கேளிக்கை » திரௌபதி திரைப்படத்தைக் காண பெண்களுக்கு இலவசச் சீட்டு

திரௌபதி திரைப்படத்தைக் காண பெண்களுக்கு இலவசச் சீட்டு

திரையரங்கில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

👤 Sivasankaran3 March 2020 11:37 AM GMT
திரௌபதி திரைப்படத்தைக் காண பெண்களுக்கு இலவசச் சீட்டு
Share Post

ஒரு தனியார் திரையரங்கில் திரௌபதி திரைப்படத்தை இலவசச் சீட்டில் திரளான பெண்கள் கண்டுகளித்தனர்.

பிரபலங்கள் இல்லாமல் புதுமுகங்கள் நடித்துள்ள திரௌபதி திரைப்படம் 4வது நாளாக திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக கடலூரில் உள்ள திரையரங்கில் பெண்களுக்கு என இலவசச் சீட்டில் சிறப்புக் காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதனால், திரையரங்கில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.