Home » கேளிக்கை » தணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு

தணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு

ஜிப்ஸி படம் மார்ச் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran4 March 2020 3:07 PM GMT
தணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு
Share Post

குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி. ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ளனர். இப்படத்துக்குச் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

தணிக்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது.

கடைசியில், ஜிப்ஸி படம் மார்ச் 6-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தணிக்கையால் வெட்டப்பட்ட காட்சிகளின் காணொளிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்துக்கு கூடுதல் விளம்பரங்கள் கிடைத்துள்ளன.