நடிகர் ஆனந்தராஜுக்கு கனகசபை எனும் இளைய சகோதரர் ஒருவர் உள்ளார். இவர் புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். அங்கே பிரபல தொழிலதிபர்களிடம் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக தெரிய வந்துள்ளது.
"ஏலச்சீட்டு நடத்துவதில் கடன் ஏற்பட்டதாகவும் ரூபாய் 50 கோடி வரை இவருக்கு கடன் ஏற்பட்டதால் இன்று கனகசபை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்" என்றும் கூறப்படுகிறது.
காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.