Home » கேளிக்கை » சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து

சினிமா படப்பிடிப்புகள் இன்று முதல் ரத்து

அஜித்குமாரின் ‘வலிமை’, கார்த்தியின் ‘சுல்தான்’ படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

👤 Sivasankaran19 March 2020 3:44 PM GMT
Share Post

உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ். இதனால் ஏற்பட்டு வரும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பும் அதிகம். இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி தொடர் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வந்தது. வட மாநிலங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர்.

அஜித்குமாரின் 'வலிமை', கார்த்தியின் 'சுல்தான்' படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தமிழ் பட உலகம் 31-ம் தேதி வரை ரூ.150 கோடி இழப்பை சந்திக்கும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.