Home » கேளிக்கை » பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்

விசு இறந்ததை கேள்விபட்டு பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

👤 Sivasankaran23 March 2020 5:00 AM GMT
பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு  காலமானார்
Share Post

சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் விசு. நடிப்பை தவிர்த்து இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் ஆகிய சினிமாத்துறையில் பணியாற்றியவர். மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் கருத்து நாடகங்களில் நடித்து பிரபலமானார்.

கண்மணிப் பூங்கா, கயிறு, ரகசியம், புதிய சகாப்தம், தங்கமணி ரங்கமணி ஆகிய படங்களில் இயக்கியதன் பெயரில் இயக்குநர் அவதாரம் எடுத்து வந்தார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததோடு, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் 75 வயதாகும் விசு சிறுநீரக பிரச்சனையால் பாதிப்படைந்து அவதியுற்றிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு விசு காலமானார்.

விசு இறந்ததை கேள்விபட்டு பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.