Home » கேளிக்கை » மீண்டும் மனைவியுடன் இணைந்தார் ஹிருத்திக்

மீண்டும் மனைவியுடன் இணைந்தார் ஹிருத்திக்

கொரோனா வைரஸ் இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளது.

👤 Sivasankaran25 March 2020 2:14 PM GMT
மீண்டும் மனைவியுடன் இணைந்தார் ஹிருத்திக்
Share Post

சுசன்னேவை 2000-ம் ஆண்டு திருமணம் செய்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.

கருத்துவேறுபாடு காரணமாக 2013 முதல் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். 2014-ல் விவாகரத்து பெற்றார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளது.

இரு குழந்தைகளும் ஹிருத்திக்கிடம் வசித்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது மகன்கள் வீட்டில் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக ஹிருத்திக்கின் வீட்டுக்கு வந்து மகன்களுக்குத் துணையாக உள்ளார் சுசன்னே.