Home » கேளிக்கை » கொரோனா வைரஸ் பாதிப்புகள்: மறு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்புகள்: மறு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்கள்

தூர்தர்ஷனில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் தொடர்கள் மறுஒளிபரப்பாகின்றன.

👤 Sivasankaran31 March 2020 1:51 PM GMT
கொரோனா வைரஸ் பாதிப்புகள்: மறு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்கள்
Share Post

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் இதனால் திரைப்படம், தொலைக்காட்சிப் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாலும் தொலைக்காட்சித் தொடர்களின் தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.

இதனால் பல தொலைக்காட்சிகளில் பழைய தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளன. அதேபோல தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களின் முக்கியக் காட்சிகளின் தொகுப்பும் தனியாக ஒளிபரப்பப்படவுள்ளன.

தூர்தர்ஷனில் ராமாயணம், மஹாபாரதம், சக்திமான் தொடர்கள் மறுஒளிபரப்பாகின்றன.

அதேபோல ரியாலிட்டி ஷோக்களின் ஒளிபரப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பு உத்தியைக் கடைப்பிடிக்கவுள்ளன.

மேலும் பெரும்பாலான நேரங்களில் தங்களிடமுள்ள படங்களைக் கொண்டு நிலைமையைச் சமாளிக்கவும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.