Home » கேளிக்கை » பாடகி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

பாடகி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

தற்போது 5வது முறை பரிசோதித்த போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

👤 Sivasankaran1 April 2020 2:30 PM GMT
பாடகி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
Share Post

பிரபல இந்தி திரைப்பட பாடகி கனிகா கபூர், லண்டனுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நட்சத்திர ஓட்டலிலும் தங்கி இருந்தார். பின்னர் அவருக்கு உடல் நிலை பிரச்சினை ஏற்பட்டதால் மருத்துவமனை சென்று பரிசோதித்தபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை நடத்தப்படும். கனிகாவுக்கு 4 முறை பரிசோதனை செய்தும் கொரோனா தொற்று இருப்பதையே உறுதிப்படுத்தியது.

தற்போது 5வது முறை பரிசோதித்த போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.