Home » கேளிக்கை » ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட பிருத்விராஜ்

ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட பிருத்விராஜ்

படக்குழுவினர் 58 பேரும் அங்கேயே இருக்கும்படி நேர்ந்துள்ளது.

👤 Sivasankaran2 April 2020 2:41 PM GMT
ஜோர்டான் பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட பிருத்விராஜ்
Share Post

பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடந்து வந்தது. கொரோனா அச்சத்தால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தது படக்குழு. அங்கிருந்து திரும்ப முடியாத நிலை இருந்ததால் ஏப்ரல் 10 வரை படப்பிடிப்பைத் தொடர முடிவெடுத்தார்கள்.

ஜோர்டான் வந்திறங்கும் அனைத்து வெளிநாட்டினரையும் 14 நாட்கள் தனிமையில் வைக்க அந்த அரசு முடிவு செய்ததால், இங்கிருந்த சென்ற படக்குழுவினர் 58 பேரும் அங்கேயே இருக்கும்படி நேர்ந்துள்ளது.

தற்போது உலகில் இருக்கும் நிலையில் எங்கள் குழுவில் இருக்கும் 58 பேரை மீட்பது என்பது இந்திய அதிகாரிகளின் பிரதான கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. எப்போது சரியான நேரமும், வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன் என பிருதிவிராஜ் பதிவிட்டுள்ளார்.