Home » கேளிக்கை » காதலில் விழுந்தார் சுனைனா

காதலில் விழுந்தார் சுனைனா

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

👤 Sivasankaran3 April 2020 3:10 PM GMT
காதலில் விழுந்தார் சுனைனா
Share Post

'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்திற்கு பின்னர், மாசிலாமணி, சமர், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 'டிரிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. 'வன்மம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிருஷ்ணா பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன் தம்பி ஆவார். கிருஷ்ணா ஏற்கனவே திருமணமாகி விவகாரத்துப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு இருவர் தரப்பிலும் எந்த பதிலும் இல்லை.