Home » கேளிக்கை » கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த அஜித்

கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த அஜித்

கொரோனா வைரசை பரவ விடாமல் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது.

👤 Sivasankaran7 April 2020 1:21 PM GMT
கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த அஜித்
Share Post

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா வைரசை பரவ விடாமல் தடுக்க பல நாடுகள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.