Home » கேளிக்கை » அப்பா கமலின் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்

அப்பா கமலின் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்

இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

👤 Sivasankaran15 April 2020 3:30 PM GMT
அப்பா கமலின் பாடலை ரீமிக்ஸ் செய்த ஸ்ருதிஹாசன்
Share Post

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். தற்போது லாபம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊடரங்கு போடப்பட்டுள்ளதால், பிரபலங்கள் தங்களின் நேரத்தை வித்தியாசமாக சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர்.

ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் Hula Hoop exercise குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்தார். தற்போது கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.